ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
கிஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(நவ. 7) வெளியாகிறது.
இந்தத் திரைப்படத்தை நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்க, கவின் நாயகனாகவும் ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாகவும் நடித்திருந்தனர்.
இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த பேட் கேர்ள் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
நாயகியாக அஞ்சலி சிவராமனும் முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
காணாமல் போன குழந்தைகளை தேடும் காவலரை மையப்படுத்தி திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட பாரமுல்லா திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(நவ. 7) காணலாம்.
நகைச்சுவை மற்றும் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட சிரஞ்சீவா படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை(நவ. 7) வெளியாகிறது.
உலகளவில் அதிகம் வசூல் செய்து ஹிட் அடித்த ஆங்கில மொழிப்படமான தி ஃபென்டாடாஸ்டிக் ஃபோர் திரைப்படத்தை ஜியோ ஹாட் ஸ்டாரில் காணலாம்.
செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்ட்ட தெலுங்கு மொழி இணையத் தொடர் நெட்வொர்க்.
நடிகர் ஸ்ரீகாந்த் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை கடந்த அக். 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படத்தில் நாயகியாக நித்யா மெனனும் வில்லனாக அருண் விஜய்யும் நடித்திருக்கின்றனர். மேலும் ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரகனி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான ’லோகா சேப்டர் 1: சந்திரா’ படம் திரையரங்குகளில் கடந்த ஆக. 28 ஆம் தேதி வெளியானது.
கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் உருவான இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்க மொழிகளில் காணலாம்.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் 1 படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.
இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான பிளாக்மெயில் படத்தில் தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, திலக் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சாம். சிஎஸ் இசையமைத்துள்ளார்.
திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட பிளாக்மெயில் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
இதையும் படிக்க: ஜன நாயகன் வெளியீடு போஸ்டர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.