செய்திகள்

அருண் விஜய்யின் ரெட்ட தல வெளியீட்டுத் தேதி!

‘ரெட்ட தல’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அருன் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் அருண் விஜய் - இயக்குநர் க்ரிஸ் திருக்குமரன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ரெட்ட தல’.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் நடிகர்கள் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ”கண்ணம்மா” எனும் முதல் பாடலை நடிகர் தனுஷ் பாடியிருந்தார். இந்தப் பாடல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ‘ரெட்ட தல’ திரைப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் இன்று (நவ. 7) அறிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: உருவ கேலி! நடிகை கௌரி கிஷனுக்கு குவியும் பாராட்டு! யூடியூபருக்கு எதிர்ப்பு!

The team of actor Arun Vijay's "Retta Thala" has announced the release date.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூா் மருதையாற்றுப் பாலத்தில் பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் அவதி

பொத்தகாலன்விளை பள்ளியில் உணவுத் திருவிழா

திருச்சியில் மூளைச்சாவு அடைந்த கரூா் இளைஞரின் உறுப்புகள் தானம்! உடலுக்கு அரசு மரியாதை!

பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி

SCROLL FOR NEXT