ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் வசனம் விஜய் ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்ததுள்ளதால் உறுதியாக பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி இன்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைப்பில் அறிவு எழுதிய இப்பாடலை நடிகர் விஜய், அனிருத், அறிவு ஆகியோர் பாடியுள்ளனர்.
இப்பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே பல லட்ச பார்வைகளையும் கருத்துகளையும் பெற்றுள்ளது. அதேநேரம், பாடலின் இறுதியில் அனிருத், விஜய்யிடம் ‘கடைசியா ஒரு டான்ஸ்..’ எனக் கேட்கிறார். அதற்கு விஜய் சரி என்கிறார்.
இந்த வசனம் இனி விஜய் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்பதையே குறிப்பதால் அவரது ரசிகர்களிடம் பெரிய வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.