நடிகர் கமல் ஹாசன் தன் 237-வது படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி கலைஞர்களை இணைத்துள்ளார்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை சண்டைப் பயிற்சியாளர்களான அன்பு, அறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள். இப்படம் ஏஐ தொழில்நுட்ப பின்னணியில் அறிவியல் புனைகதையாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக முழுக்கவே தொழில்நுட்ப கலைஞர்களை மலையாள சினிமாவிலிருந்து கமல்ஹாசன் களமிறக்கியுள்ளார்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சுனில் கே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இசையமைப்பாளர் - ஜேக்ஸ் பிஜாய். தற்போது, தென்னிந்திய சினிமாவில் அதிகம் பேசப்படும் இசையமைப்பாளராக பிஜாய் உருவாகியுள்ளார்.
எடிட்டர் - ஷமீர் கேஎம், கலை இயக்குநராக வினேஷ் பங்கலான் (லக்கி பாஸ்கர், லோகா) ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இதைவிட, மலையாள சினிமாவின் மிக வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளரான ஷ்யாம் புஸ்கரன் இப்படத்தின் திரைக்கதையை எழுதுகிறார். இதனால், தொழில்நுட்ப குழு முழுவதும் மலையாள சினிமாவிலிருந்துதான் இறக்கப்பட்டிருக்கிறார்கள்!
இதையும் படிக்க: கவினின் மாஸ்க் டிரைலர் எப்போது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.