தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்காக மோகன்லாலுக்கு நடிகர் சங்கம் பிரம்மாண்ட விழா எடுக்க முடிவுசெய்துள்ளது.
மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் மோகன்லால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளாா். 2 தேசிய விருதுகள், 9 கேரள மாநில அரசு விருதுகள் மற்றும் பல்வேறு சா்வதேச கெளரவங்களையும் பெற்றுள்ள மோகன் லாலுக்கு கடந்த 2001 இல் பத்மஸ்ரீ, 2019 இல் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
அண்மையில், இந்திய திரைத்துறைக்கு இவர் ஆற்றிய தனிச்சிறப்புப் பங்களிப்புக்காக, தாதாசாகேப் பால்கே விருது தோ்வுக் குழுவின் பரிந்துரைபடி, 2023 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதற்காக, கேரள அரசு மோகன்லாலுக்கு பெரிய விழாவாக எடுத்து அவருக்கு மரியாதையைச் செய்தது.
இந்நிலையில், கேரளத் திரைத்துறையின் நடிகர் சங்கமான அம்மாவும் தயாரிப்பு சங்கமும் மோகன்லாலைப் பாராட்ட பிரம்மாண்ட விழா எடுக்க முடிவு செய்துள்ளனர்.
டிசம்பர் மாதம் கொச்சியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் நடிகர் மம்மூட்டி கலந்துகொள்வார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: தமிழில் ஓர் இடத்தைப் பிடிப்பாரா பாக்யஸ்ரீ போர்ஸ்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.