ஹிப்ஹாப் ஆதி, சுந்தர் சி, ரஜினி.  கோப்புப் படங்கள்.
செய்திகள்

ஹிப்ஹாப் ஆதி இசை - ரஜினி நடனம்: வைரலாகும் ரீல்ஸ்கள்!

சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ரஜினி படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ரஜினி படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையான ரீல்ஸ்கள் சமூக வலைதளத்தில் உலவி வருகின்றன.

குறிப்பாக ரஜினியின் நடன அசைவுகளும் ஹிப் பாப் ஆதியின் துள்ளலான இசையையும் கோர்த்து உருவாக்கப்பட்டுள்ள ரீல்ஸ் விடியோக்கள் கவனம் ஈர்த்துள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் அவரது 173-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளது.

இதனை, நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. பொங்கல் 2027-க்கு இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இதற்கு இசையமைப்பாளர் யார் என்று அறிவிக்காத நிலையில், சமூக வலைதளத்தில் ஹிப் பாப் ஆதி - ரஜினி நடன விடியோக்கள் வைரலாகி வருகின்றன.

தற்போது, அகிலம் அதிருதா என அறிவிப்பு விடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Imaginary reels of what it would be like if Hip-Bop Aadi composed music for Rajinikanth's upcoming film directed by Sundar C are circulating on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

2-வது ஒருநாள்: இலங்கை அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

ஒரே மேடையில் சுனிதா வில்லியம்ஸ் - பாவனா! இலக்கியத் திருவிழாவில் சுவாரசியம்!

காலாண்டு வருவாய் அறிவிப்புக்குப் பிறகு ரிலையன்ஸ் 3% சரிவு!

மீண்டும் வெல்வோம்! நாங்கள்தான் மீண்டும் மீண்டும் வருவோம்! - முதல்வர் Stalin

SCROLL FOR NEXT