பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வதியின் இடது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்துள்ளது. கடந்த சனி, ஞாயிறு நிகழ்வில் துஷார் மற்றும் பிரவீன் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், இந்த வார கேப்டன் பதவிக்கான போட்டிக்கு பார்வதி, சபரி மற்றும் திவ்யா ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு அளிக்கப்பட்ட டாஸ்க்கில் சபரி மற்றும் பார்வதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவதும், பார்வதியை சபரி தள்ளிவிடும் காட்சிகளும் இன்றைய முதல் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன.
சபரி, தள்ளிவிடுகிறார், ஷூ கால்களால் மிதிக்கிறார் என்று பார்வதி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், இரண்டாவது ப்ரோமோவில் பார்வதியின் இடது கண்ணில் பலமாக அடிபட்டிருப்பது தெரிகிறது. மேலும், கேப்டன் டாஸ்க்கில் குரூப்பாக சேர்ந்து சிலர் செயல்பட்டதாகவும், தனக்காக யாரும் பேச முன்வரவில்லை என்றும் பார்வதி கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், கேப்டன் டாஸ்க்கின் போதுதான் கண்ணில் காயம் ஏற்பட்டதா? என்பது ப்ரோமோவில் தெளிவாக இடம்பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.