பிக் பாஸ் வீட்டில் பிரவீன் ராஜ் தேவசகாயம் படம் - எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 9: மறக்க முடியாத போட்டியாளராக மாறிய பிரவீன் ராஜ்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் மறக்க முடியாத போட்டியாளராக நடிகர் பிரவீன் ராஜ் தேவசகாயம் மாறியுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் மறக்க முடியாத போட்டியாளராக நடிகர் பிரவீன் ராஜ் தேவசகாயம் மாறியுள்ளதாக பிக் பாஸ் அறிவித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்து 6 வது வாரத்தை எட்டியுள்ளது. இதனிடையே 5 வது வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக பிரவீன் ராஜ் வெளியேற்றப்பட்டார். இது போட்டியாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.

இது குறித்து பிக் பாஸ் பேசும்போது, இந்த சீசனின் மறக்க முடியாத போட்டியாளராக பிரவீன் ராஜ் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

விஜய் சேதுபதி பாராட்டு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகவும் வலுவான போட்டியாளர் பிரவீன் ராஜ் என விஜய் சேதுபதி தெரிவித்தார். பிரவீன் ராஜ் வெளியேறுவது எதிர்பாராத ஒன்று என்றும், இப்போட்டி இவ்வாறுதான் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இத்தோடு மட்டுமின்றி பிரவீன் ராஜ் வெளியேறும்போது இதுவரை எந்தவொரு போட்டியாளருக்கும் இல்லாத வகையில் அனைவருமே தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்தனர்.

அரோரா சின்கிளேர், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் என பிக் பாஸ் வீட்டில் தகுதி இல்லாத பல போட்டியாளர்கள் நீடித்து வரும் நிலையில், போட்டிகளில் சிறப்பாக பங்கேற்று, நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்த பிரவீன் ராஜ் வெளியேறியது அதிருப்தியானது என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களிலும் பலர் பிரவீன் ராஜுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் போட்டியில் கடைசிவரை இருந்தால்தான் வெற்றி என்று இல்லை, நீங்கள் மக்கள் மனதை வென்றுள்ளீர்கள் எனவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் பிரவீன் ராஜ் நன்றி தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.

விடியோவில் அவர் பேசியுள்ளதாவது,

பிக் பாஸிலிருந்து வெளியேறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனமுடைந்துவிட்டேன். அந்த உணர்ச்சியில் இருந்து வெளியேற என்னால் முடியவில்லை. வெளியேற்றத்தின் மூலம் இருட்டைப் பார்த்துவிட்டேன் என நினைத்துக்கொண்டிருந்தேன், ஆனால், வெளியே வந்த பிறகு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. காலம் முழுக்க என் திறைமையை உங்களுக்கு விசுவாசமாக வெளிப்படுத்துவேன். இது ஒரு முடிவு என்று நினைத்தேன். ஆனால் உங்கள் அன்பு எனக்கு புதிய தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.

எனக்கு உறுதுணையாக இருந்ததற்கு மனமார்ந்த நன்றி. இந்த நன்றி எப்போதும் என்னிடம் இருக்கும். என் மீது அக்கறை எடுத்து என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. கடவுள் ஒரு விதியை எழுதினால், மக்கள் வேறொரு விதியை எழுதுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரவீன்! எளிமையாக வரவேற்ற குடும்பம்!

Bigg boss, vijay sethupathi praised Praveen raj devasagayam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரீநியூ நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் ரூ.467 கோடி!

தில்லி செங்கோட்டை அருகே வெடித்த கார்: விபத்தா? சதிச்செயலா?

புத்துணர்வு... மாலத்தீவுக் கடல்... ராய் லட்சுமி!

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் 2-வது காலாண்டு லாபம் உயர்வு!

ஜம்மு - காஷ்மீரில் 2,900 கிலோ வெடிப்பொருள் பறிமுதல்: தாக்குதல் திட்டம் முறியடிப்பு

SCROLL FOR NEXT