செய்திகள்

புதிய சிக்கலில் காந்தா!

காந்தா திரைப்படத்திற்குத் தடை கோரி வழக்கு....

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம் நீதிமன்ற வழக்கைச் சந்தித்துள்ளது.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “காந்தா”. இந்தப் படம், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

டீசர், டிரைலரால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படம் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்ட படமென்பதால், அவரின் மகள் வழிப்பேரன் சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், தியாகராஜ பாகவதரின் சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து அனுமதி வாங்கிய பின்பே திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும் அதுவரை இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து தயாரிப்பாளரான துல்கர் சல்மான் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

kaantha movie faces new legal action from m.k.thiyagaraja baghavatar family

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூடானில் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!

குடியுரிமை பறிக்கும் SIR! - விளக்கிய கனிமொழி!

கனத்த இதயத்துடன் வந்திருக்கிறேன்; சதிகாரர்கள் தப்ப முடியாது! - மோடி

ஜில்லு... தன்யா சர்மா!

பிகார் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று! கடந்த கால கணிப்புகள் - முடிவுகள் ஒப்பீடு!!

SCROLL FOR NEXT