அருள்நிதி 
செய்திகள்

காமெடி கதையில் அருள்நிதி!

அருள்நிதி நடிக்கும் புதிய படத்தின் டீசர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அருள்நிதி நடித்துவரும் புதிய திரைப்படத்தின் பெயர் டீசர் கவனம் ஈர்த்து வருகிறது.

நடிகர் அருள்நிதி, மம்தா மோகன்தாஸ், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கு, மை டியர் சிஸ்டர் எனப் பெயரிட்டுள்ளனர்.

இத்திரைப்படத்தை, என்னங்க சார் உங்க சட்டம் படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்குகிறார்.

அக்கா, தம்பிக்கு இடையேயான சண்டைகளும் பாசமுமாக இப்படம் உருவாகிவருவதாகத் தெரிகிறது.

தமிழ் சினிமாவின் நாயகர்களின் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் எனப் பெயரெடுத்தவர் அருள்நிதி. இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி - 2 நல்ல வெற்றியையும் ராம்போ கலவையான விமர்சனங்களையும் பெற்றன.

அடுத்ததாக, மை டியர் சிஸ்டரில் நடித்தும் வருகிறார். இம்முறை கிரைம் திரில்லர், ஹாரர் திரில்லர் கதையாக இல்லாமல் காமெடி கதையைத் தேர்ந்தெடுத்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!

சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

SCROLL FOR NEXT