இந்திய சினிமாவில்... நடிகராக அதிக சம்பளம் வாங்கிய தமிழ் இயக்குநர்!
அறிமுக படத்திலேயே அதிக சம்பளம் பெற்ற இயக்குநர்...
அறிமுக நடிகரான தமிழ் இயக்குநர் ஒருவர் அதிக சம்பளம் வாங்கியிருக்கிறாராம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகிறார். டிசி எனப் பெயரிட்ட இப்படம் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது.
இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும் சந்திராவாக வாமிகா கபியும் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இதன் டீசர் அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து ரத்தமும் போதைப்பொருளுமான திரைப்படங்களை லோகேஷ் கனகராஜும் அருண் மாதேஸ்வரனும் எடுத்து வருவது மோசமான போக்கைத்தான் காட்டுக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனாலும், ஆக்சன் படத்திற்கே உண்டான எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜுக்கு சம்பளமாக ரூ. 30 கோடி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் உண்மையானால், இந்திய சினிமாவிலேயே நடிகராக அறிமுகமாகும் ஒருவர் பெற்ற அதிகபட்ச சம்பளம் இதுதான்.
இதையும் படிக்க: காஞ்சனா - 4 படத்தில் இணைந்த பிரபலங்கள்!
director lokesh kanagaraj gets high salary for his acting debut
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.