இசையமைப்பாளர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார், யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா இன்ஸ்டா
செய்திகள்

பராசக்தி! ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடிய யுவன்!

‘பராசக்தி’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகி வரும் “பராசக்தி” திரைப்படத்தில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா புதிய பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோரின் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பராசக்தி”.

கடந்த 1960-களில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் நடைபெற்ற மொழிப்போர் தொடர்புடைய கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100 ஆவது திரைப்படமான “பராசக்தி” -யில், பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம், வரும் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தேரே இஷ்க் மெய்ன் படத்தில் 9 பாடல்கள்?

Music composer Yuvan Shankar Raja has sung a new song in the upcoming film “Parasakthi” with music by G.V. Prakash Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

மீன்பிடி படகு மீது மோதிய சுற்றுலா பயணிகள் படகு! இளம் பெண் பலி | Thailand

SCROLL FOR NEXT