ரஜினிகாந்த், கமல் ஹாசன், சுந்தர். சி 
செய்திகள்

ரஜினி படத்திலிருந்து சுந்தர். சி விலகல்!

இயக்குநர் சுந்தர். சியின் திடீர் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தலைவர் - 173 திரைப்படத்திலிருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர். சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ், நெல்சன் என இளம் இயக்குநர்களுடன் பணியாற்றிய ரஜினி மீண்டும் மூத்த இயக்குநரான சுந்தர்.சியுடன் இணைந்தது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ”தவிர்க்க முடியாத காரணங்களால் கனத்த இதயத்துடன் இப்படத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன்” என சுந்தர். சி அறிக்கை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில், “நீண்ட காலம் கழித்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அவர்கள் எனக்கு வழங்கியதற்காக நன்றியைத் தெரிவிக்கிறேன். அதேநேரம், நான் சூப்பர் ஸ்டாரின் படத்தை இயக்குகிறேன் என செய்தி வெளியானபோது உற்சாகமான ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திடீர் அறிக்கை ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, சுந்தர். சி முக்குத்தி அம்மன் - 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

director sundar. c out from the project of thalaivar 173 produced by kamal haasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்லச் சிரிப்பு... ரித்தி டோக்ரா!

விநாயகர் பற்றி குரோக் - எலான் மஸ்க் இடையே நடந்த உரையாடல் வைரல்!

சற்றே உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!!

10 கிலோமீட்டர் தொலைவு சாலைவலம்; தீப்தி சர்மாவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்த முறை, நான் வித்தியாசமாக ஒளிர்கிறேன்... கௌரி கிஷன்!

SCROLL FOR NEXT