கவனம் ஈர்க்கும் தீயவர் குலை நடுங்க பட டிரைலர்!
ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜுனின் தீயவர் குலை நடுங்க படத்தின் டிரைலர் குறித்து...
நடிகர் அர்ஜுன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தீயவர் குலை நடுங்க படத்தின் டிரைலர் கவனம் ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.
இப்படம் நவ. 21 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
The trailer of the film Theeyavar Kulai Nadunga, starring actor Arjun and actress Aishwarya Rajesh, has attracted attention.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.