பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களின் காவலராக கமருதீன் தன்னை நினைத்துக்கொள்வதாக கனி விமர்சித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தின் கேப்டனாக எஃப்.ஜே., பொறுப்பேற்றுள்ளார்.
இதனிடையே பிக் பாஸ் வீட்டில் சிறைக்குச் செல்லும் நபர்கள் குறித்து தேர்வு செய்ய போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் ஒரு போட்டியை அறிவித்தார்.
இதன்படி, கடும் போட்டியாளராகக் கருதும் நபர், போட்டியாளர் என்ற பட்டியலிலேயே இடம்பெறாத நபர் என இருவரை அனைவரும் கூற வேண்டும். இதில், பேசிய விஜே பார்வதி, வியானா, சுபிக்ஷா என அனைவரும் தங்கள் மனதில் கருதியதைக் கூறினர்.
ஆனால், கனி திருவும், கமருதீனும் கூறும்போது தனிப்பட்ட முறையில் இருவரும் தாக்கிப் பேசிய விடியோ முன்னோட்டமாக வெளியாகியுள்ளது.
இதில் பேசிய கமருதீன், ''திறந்து பார்க்காத நோட்டுப்புத்தகம் போன்றவர் கனி. எதற்குமே பயன்படுத்தப்படாதவர். ஒருமுறை கூட நான் கூறியதை கனி புரிந்துகொண்டதே இல்லை. எப்போதுமே அவருடைய கருத்துகள் எனக்கு ஒத்துப்போனதே இல்லை'' என கமருதீன் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த கனி, கமருதீனை தான் ஒரு போட்டியாளராகவே கருதவில்லை எனக் குறிப்பிட்டுப் பேசினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேச்சுக்குக் கூட ஒருவரை நினைக்கவில்லை என்றால் அது கமருதீன் தான் எனக் குறிப்பிட்டார்.
மேலும், ''அவரிடம் நான் பேசும் நேரங்கள் அனைத்தும் வீணானது என நினைக்கிறேன். இந்த வீட்டில் பெண்களின் காவலராக தன்னைக் காட்டிக்கொள்கிறார். அவர் தன்னை ஒரு நாயகனாக நினைத்துக்கொள்கிறார், ஆனால் அவர் ஒரு காமெடியன்தான்'' எனக் கடுமையாக கருத்துகளை முன்வைத்தார். இந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | உண்மையான அன்பு... பிக் பாஸிலிருந்து வெளியேறிய திவாகரின் வைரல் விடியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.