பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியிலிருந்து வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் வெளியேற்றப்பட்டார். அவர் தனது வீட்டிற்குச் சென்றதும் சந்தித்த முதல் நபர் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவில், தனது வளர்ப்பு நாய் நீண்ட நாள்கள் கழித்து தன்னைப் பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து விளையாடியதைப் பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல நபர்களுடனான வாக்குவாதத்தில் போட்டியாளர்களின் வெறுப்புகளை ஈட்டிய நபராகவே திவாகர் அறியப்பட்டு வந்த நிலையில், தனது இல்லத்தில் நீண்ட நாள்கள் கழித்து வளர்ப்பு நாயிடம் கிடைத்த அன்பை ரசிகர்களுடனும் பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வது வாரத்தை எட்டியுள்ளது. 5 வது வாரத்தில் நிகழ்ச்சியின் 42 வது நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திவாகர் வெளியேற்றப்பட்டார்.
கடந்த வாரம் வெளியேறத் தகுதியான நபர்களின் பட்டியலில் வியானா, விக்ரம், சுபிக்ஷா, சான்ட்ரா, ரம்யா, பார்வதி, கனி, திவாகர், திவ்யா மற்றும் அரோரா எனப் பலர் இடம்பெற்றிருந்தனர்.
இதில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக நடிகர் திவாகர் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் திவாகருடன் நெருக்கமாக இருந்த பார்வதி, மிகுந்த சோகத்தில் அவரை வழியனுப்பிவைத்தார்.
எனினும், நிகழ்ச்சியில் தான் 42 நாள்கள் வரை இருந்ததே மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறி, வெளியுலக வாழ்க்கையை மிகுந்த நேர்மறை எண்ணங்களுடன் அணுகப்போவதாக, பிக் பாஸ் போட்டியாளர்களிடமிருந்து திவாகர் விடைபெற்று வெளியேறினார்.
இந்நிலையில், இன்று தனது வீட்டிற்குச் சென்ற திவாகர், தனது வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் நீண்ட நாள்கள் கழித்து தன்னைப் பார்த்த மகிழ்ச்சியான சம்பவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
இதில், திவாகரின் வளர்ப்பு நாய் அவரைக் கண்டதும் மகிழ்ச்சியில் அங்குமிங்கும் தாவி ஓடி அவரைக் கட்டியணைத்துக்கொள்கிறது. இதனை விடியோவாக திவாகர் பகிர்ந்துள்ளார்.
நாய்களின் மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் பதிவு உள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.