செய்திகள்

அனுபமா பரமேஸ்வரனின் லாக்டவுன் வெளியீட்டுத் தேதி!

லாக்டவுன் வெளியீட்டுத் தேதி...

இணையதளச் செய்திப் பிரிவு

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான லாக்டவுன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

தமிழில் தனுஷ் உடன் ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். அனுபமா நடிப்பில் வெளியான ‘கார்த்திகேயா - 2’ , ‘18 பேஜஸ்’ டில்லு ஸ்கொயர் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றன.

இறுதியாக, இயக்குநர் மாரி செல்வராஜின் பைசன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில், அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது.

இதற்கிடையே, லைகா நிறுவனம் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வந்தார். இப்படத்துக்கு ‘லாக் டவுன்’ பெயரிடப்பட்டிருந்தது. ஏஆர் ஜீவா இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு என்ஆர் ரகுநாதன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர்.

இந்த நிலையில், நீண்ட நாள்களாக வெளியீட்டிற்காகக் காத்திருந்த இப்படம் டிச. 5 ஆம் தேதி திரைக்கு வருமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

anupama parameswaran's lockdown movie release date has been announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடக்கிவைத்தார் மோடி!

ரோஹித்தை முந்திய டேரில் மிட்செல்.. ஐசிசி தரவரிசையில் 46 ஆண்டுகளுக்குப் பின் சாதனை!

கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை!

தில்லி செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் வெடிகுண்டை உருவாக்கினாரா உமர்? தகவல்கள்!

42/48: 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தேர்வான அணிகள்!

SCROLL FOR NEXT