நிவின் பாலியின் சர்வம் மாயா படத்தின் வெளியீட்டுத் தேதி!
மலையாள நடிகர் நிவின் பாலியின் “சர்வம் மாயா” படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...
பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியின் ‘சர்வம் மாயா’ எனும் புதிய திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேமம், ஓம் சாந்தி ஓஷானா, நேரம் போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகர் நிவின் பாலி.
இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “சர்வம் மாயா”. இந்தப் படத்தில், நடிகர்கள் அஜு வர்கீஸ், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியுள்ள ‘சர்வம் மாயா’ திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் இன்று (நவ. 19) அறிவித்துள்ளனர்.
முன்னதாக, இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் - நடிகர் ராகவா லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் “பென்ஸ்” படத்தில் நடிகர் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சின்மயி குரலில்! சசி குமாரின் மை லார்ட் படத்தின் முதல் பாடல்!