நடிகர் பிரேம்ஜிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் பிரேம்ஜி அமரன். இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான இவர் விஜய்யின் ‘தி கோட்’ படத்திலும் இறுதியாக, இயக்குநர் கருப்பையா முருகன் இயக்கி, தயாரித்த ‘வல்லமை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், பிரேம்ஜி - இந்து இணைக்குப் பெண் குழந்தைப் பிறந்துள்ளதாக வல்லமை பட இயக்குநர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
47 வயதில் தந்தையான பிரேம்ஜிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: சூர்யா - 47 படப்பிடிப்பு அப்டேட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.