நடிகர் அஜித் குமார் நடித்த அமர்க்களம் திரைப்படம் மறுவெளியீடாக உள்ளது.
இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிகர்கள் அஜித் குமார், ஷாலினி நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அமர்க்களம். காதல் படமான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அஜித்துக்கு வெற்றிப்படமாகவும் அமைந்தது.
இதில் இடம்பெற்ற, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்த நிலையில், இப்படம் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்ததைக் கொண்டாடும் விதமாக இதனை மறுவெளியீடு செய்யவுள்ளதாக இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார்.
இன்று அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பும் அமர்க்களத்தின் புதிய டீசரும் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: உடல் எடையைக் குறைத்த கிரேஸ் ஆண்டனி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.