இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன் புதிய பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பிலும் இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது இசையமைப்பில் 100-வது திரைப்படமாக பராசக்தி உருவாகி வருகிறது.
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், பராசக்தியின் இரண்டாவது பாடல் தன் இசைப்பயணத்தின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா பாடிய இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு! கீர்த்தி சுரேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.