பைசன், டீசல் படங்களிம் போஸ்டர். 
செய்திகள்

ஓடிடியில் வெளியான பைசன், டீசல்!

பைசன், டீசல் படங்களின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

பைசன் மற்றும் டீசல் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படம் இன்று(நவ. 21) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அதேபோல, நடிகர் ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து திரைப்படத்திற்குப் பின் நடித்துள்ள திரைப்படம் டீசல். ஆக்சன், திரில்லர் கதையாக உருவான இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் அதுல்யா ரவி நாயகியாகவும், நடிகர்கள் வினய், கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டீசல் திரைப்படம் ஆஹா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் இன்று(நவ. 21) வெளியாகியுள்ளது.

The OTT releases of the films Bison and Diesel are attracting the attention of fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வார ஓடிடி படங்கள்!

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - தவெகவினருக்கு காவல்துறை விளக்க கடிதம்!

ஆபத்தான நிலையில் செய்யாற்றைக் கடந்து பள்ளி செல்லும் மாணவர்கள்! பெற்றோர்கள் கவலை!

Money Heist இல்ல! ருத்ரா! | Mask திரைப்பட இயக்குநர் விக்ரணன் அசோக்குடன் சிறப்பு நேர்காணல்!

புதிய ஹீரோவுக்கு வழி... சிறகடிக்க ஆசை நடிகரின் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT