செய்திகள்

விஷ்ணு விஷாலின் ஆர்யன் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

‘ஆர்யன்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ திரைப்படம் வரும் நவ.28 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் “ஆர்யன்”. இப்படம், கடந்த அக்.31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம், வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், ஆர்யன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் மாற்றி கடந்த நவ.6 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில், நடிகர் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படம் வரும் நவ.28 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இத்துடன், ஆர்யன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகின்றது.

இதையும் படிக்க: அஞ்சான் மறுவெளியீட்டு டிரைலர்!

Actor Vishnu Vishal's film 'Aryan' will be released on OTT on November 28th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT