விஜய் 
செய்திகள்

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் 35 பாடல்கள்?

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டில் விஜய்யின் முக்கியமான பாடல்கள் பாடப்பட உள்ளதாம்.

நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி அண்மையில் வெளியாகி அசத்தலான வரவேற்பைப் பெற்றது.

அனிருத் இசையமைப்பில் அறிவு எழுதிய இப்பாடலை நடிகர் விஜய், அனிருத், அறிவு ஆகியோர் பாடியிருந்தனர்.

இரண்டாவது பாடல் அறிவிப்புக்கு முன்பே, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிச. 27 ஆம் தேதி நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிகழ்வில் விஜய், எச். வினோத், அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதால் ஏராளமான தமிழர்கள் வருவார்கள் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், இந்த இசை வெளியீட்டு நிகழ்வில் நடிகர் விஜய்யின் 35 ஹிட் பாடல்களுக்கான இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறதாம். இதற்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் ரூ. 2200-லிருந்து ரூ. 14,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

மேலும், சில சுற்றுலாத்துறை நிறுவனங்கள் சென்னையிலிருந்து, மலேசியா - ஜன நாயகன் இசைவெளியீட்டு விழா - சிங்கப்பூர் பயணத்திற்கான திட்டங்களையும் அறிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாராந்திர ரயில்களின் சேவைகள் நீட்டிப்பு

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும் கடகத்துக்கு: தினப்பலன்கள்!

திமுக தோ்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்: கனிமொழி எம்.பி.

தேமுதிக இண்டி கூட்டணிக்கு வரவேண்டும்: ஜோதிமணி எம்.பி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

SCROLL FOR NEXT