ஆண்பாவம் பொல்லாதது ஓடிடி தேதி!
ஆண்பாவம் பொல்லாதது ஓடிடி வெளியீட்டுத் தேதி...
ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.
குடும்பத் தலைவனான நாயகன் திருமணத்திற்குப் பின் சந்திக்கும் நெருக்கடிகளை நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படம் கடந்த அக். 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், கூடுதலாக பல திரைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளது.
தற்போது, தமிழகத்தில் இப்படம் ரூ. 22 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரியோ ராஜ் மற்றும் மாளவிகாவுக்கு பெரிய வெற்றிப்படமாக ஆண்பாவம் பொல்லாதது அமைந்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் வருகிற நவ. 28 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கைதி - 2 பணிகளைத் துவங்கிய லோகேஷ் கனகராஜ்?
aan paavam pollathathu movie will release on hotstar ott
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.