ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
ரக்ஷித், கோமலி பிரசாத் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்த சசிவதனே என்ற தெலுங்கு மொழிப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நவ. 28-ல் வெளியாகிறது.
இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ஆர்யன்.
நடிகர் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்தப் படம் நவ.28 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தினகரன் எம். எழுதி இயக்கியுள்ள ரேகை என்ற இணையத் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் நவ. 28-ல் வெளியாகிறது.
இந்த இணையத் தொடரில் பாலஹாசன், பவித்ரா ஜனனி ஆகியோர் காவல் துறை அதிகாரிகளாக நடித்துள்ளனர்.
நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட மலையாள மொழிப்படமான பெட் டிடெக்டிவ் திரைப்படம் தமிழ் மொழியில் ஜீ5 ஓடிடி தளத்தில் நவ. 28-ல் வெளியாகிறது.
இந்தப் படத்தில் ஷரஃப் உ தீன், அனுபமா பரமேஸ்வரன், விநாயகன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரவி தேஜா, ஸ்ரீலீலா, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் நடிப்பில் வெளியான மாஸ் ஜாதரா என்ற தெலுங்கு மொழிப்படம் கடந்த ஆக. 27-ல் திரையரங்குகளில் வெளியானது.
இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நவ. 28-ல் வெளியாகிறது.
நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து திரைப்படத்திற்குப் பின் நடித்துள்ள திரைப்படம் டீசல். ஆக்சன், திரில்லர் கதையாக உருவான இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அதுல்யா ரவி நாயகியாகவும், நடிகர்கள் வினய், கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டீசல் திரைப்படத்தை ஆஹா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் காணலாம்.
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான ‘ஹோம்பவுண்ட்’ என்ற ஹிந்தி மொழிப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
நீரஜ் கவான் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் தம்பி ராமையா, காயத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட திரைப்படம் முருகேசன் +2.
இந்தத் திரைப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
சசிகுமார் - சூர்யா சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள நடுசென்டர் இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த இணையத் தொடரில் சசிகுமார் (பயிற்சியாளராக), கலையரசன், ஆஷா சரத், ரெஜினா கசெண்ட்ரா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜி.வி. பிரகாஷ் குமார் குரலில் வெளியான பராசக்தி பட பாடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.