நடிகர் தனுஷ் ராஞ்சனா திரைப்படத்தின் குந்தன் கதாபாத்திரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவான தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் நாளை (நவ. 28) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ராஞ்சனா (அம்பிகாவதி) கதையின் உலகத்துடன் தொடர்புடைய கதையாகவே இப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், தேரே இஷ்க் மெய்ன் புரமோஷனுக்காக வாரணாசி சென்றுள்ள தனுஷ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “எல்லாம் எங்கு தொடங்கியதோ அந்த நினைவுப்பாதையில் நடக்கிறேன். குந்தன் (ராஞ்சனாவில் தனுஷ் பெயர்) என்கிற ஒரு கதாபாத்திரம் தசாப்த காலத்திற்கும் மேலாக என்னைவிட்டு விலக மறுத்துக்கொண்டே இருக்கிறது. பனாரஸின் குறுகிய வீதிகளில் மக்களால் இன்னும் குந்தனின் பெயர் எதிரொலிக்கும்போது நான் புன்னகையுடன் திரும்பிச் சிரிக்கிறேன்.
இப்போது அதே வீதிகளில், அதே வீட்டின் முன்பே, அதே தேநீர் கடையில், புனித கங்கை கரையில் குந்தன் கதாபாத்திரத்தை உருவாக்கியவருடன் நடந்தபோது முழுமையடைந்ததைப் போல உணர்ந்தேன். இந்த முறை இது ஷங்கருக்கான நேரம். தேரே இஷ்க் மெய்ன். நாளை வெளியாகிறது. ஹர ஹர மகாதேவ்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: அதிக தொகைக்கு விற்பனையான கருப்பு ஓடிடி உரிமம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.