நடிகர் விஜய் 
செய்திகள்

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் 1 லட்சம் பேர்?

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா எண்ணிக்கை குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பல ஆயிரம் ரசிகர்கள் கலந்துகொள்கின்றனர்.

நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிச. 27 ஆம் தேதி நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த இசை வெளியீட்டு நிகழ்வில் நடிகர் விஜய்யின் 35 ஹிட் பாடல்களுக்கான இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறதாம். இதற்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் ரூ. 2200-லிருந்து ரூ. 14,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

விஜய்யின் பிரபலமான பாடல்களைப் பாட நடிகை ஆண்ட்ரியா, பாடகர்கள் விஜய் ஜேசுதாஸ், யோகி பி, ஹரிஷ் ராகவேந்திரா, சரண், சைந்தவி, அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்துகொள்வதாகத் தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு விடியோவாக வெளியிட்டு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த இசை வெளியீட்டு விழா மைதானத்தில் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் பகுதிகளிலிருந்து சுமார் 1 லட்சம் ரசிகர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் அதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளைத் தயாரிப்பு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மைதானமான புக்கிட் ஜலீலில் 85 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ளலாம் எனபது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலர் பிளாக் அன்ட் வொயிட்... யாஷிகா ஆனந்த்!

என்னவென்று சொல்வேன்... அனுஷ்கா!

எனக்குப் பிடித்த லுக்... ஆம்னா ஷரீஃப்!

சீனப் பெண்ணாகவா தெரிகிறேன்?... மன்னாரா சோப்ரா!

கோவையில் துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தை உடல் வீசப்பட்ட கொடூரம்!

SCROLL FOR NEXT