தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி 
செய்திகள்

தனுஷ் - 55 தயாரிப்பிலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?

தனுஷ் - 55 குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள அவரது 55-வது படத்தின் தயாரிப்பிலிருந்து பிரபல நிறுவனம் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் 55ஆவது படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்தைக் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிப்பதாக அறிவிக்கவும்பட்டது. அதற்கான, பூஜை புகைப்படங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே இட்லி கடை, தேரே இஷ்க் மே, தனுஷ் - 54 ஆகிய படங்களில் தனுஷ் நடித்து முடித்தார். இதில் இரண்டு திரைப்படங்கள் திரைக்கும் வந்துவிட்டன.

இந்த நிலையில், தனுஷ் - 55 திரைப்படத்திலிருந்து அன்புச் செழியன் விலகியதாகக் கூறப்படுகிறது.

காரணம், இது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதால் தனுஷே இப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூட்டணிக்காக நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

dhanush - 55 movie update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்ஃபி புள்ள... சாக்.ஷி மாலிக்!

சையது முஷ்டாக் அலி கோப்பை: 49 பந்துகளில் சதம் விளாசி ஆயுஷ் மாத்ரே அசத்தல்!

ஹாட் சாக்கலேட் சீசன்... பிரகிருதி பாவனி!

கண்களால் கைது செய்... யாஷிகா ஆனந்த்!

திரை விலகும் தருணம்... நிக்கி தம்போலி!

SCROLL FOR NEXT