லெஜெண்ட் சரவணனின் லீடர் கிளிம்ஸ்!
லீடர் திரைப்படத்தின் கிளிம்ஸ்...
லெஜெண்ட் சரவணன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் பெயர் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லெஜெண்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், அடுத்ததாக கதையசமுள்ள இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார்.
தற்போது, எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமாருடன் இணைந்துள்ளார்.
Advertisement
Advertisement
அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்திற்கு, ‘லீடர்’ எனப் பெயரிட்டுள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.