செய்திகள்

பராசக்தி டப்பிங் பணியில் சிவகார்த்திகேயன்!

‘பராசக்தி’ திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் துவங்கியுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

‘பராசக்தி’ திரைப்படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் துவங்கியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பராசக்தி”. 1960-களில் மொழிப்போர் காலங்களில் மதராஸ் மாகாணத்தில் நடைபெறும் கதைகளத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை இன்று (நவ. 28) துவங்கியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக, நடிகர்கள் ரவி மோகன், ஸ்ரீ லீலா ஆகியோர் தங்களது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: துல்கர் சல்மானின் ஐயம் கேம் முதல் பார்வை போஸ்டர்!

Actor Sivakarthikeyan has begun dubbing for his scenes in the film 'Parasakthi'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7 கி.மீ. வேகத்தில் நகரும் டிட்வா புயல்!

”புனித ஆட்சி தருவதற்காக Vijay வந்துள்ளார்!” - கோவையில் Sengottaiyan பேட்டி

Tere Ishk Mein movie review | Dhanush | Kriti Sanon

2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? மோர்னே மோர்க்கல் பதில்!

வாழ்நாள் சாதனையாளர் விருது! இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கௌரவம்!

SCROLL FOR NEXT