அமெரிக்க இணையத் தொடரான ஸ்டிரேஞ்சர் திங்ஸ் சீசன் 5க்கு ரூ. 3,300 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரையான அனைத்து சீசன்களையும் சேர்த்து மொத்தம் ரூ.7,000 கோடியை நெட்பிளிக்ஸ் செலவளித்துள்ளதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகமாக செலவிடப்பட்ட தொடர்களில் ஸ்டிரேஞ்சர் திங்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் இருக்கிறது.
டஃபர் பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டிரேஞ்சர் திங்ஸ் 2016 முதல் வெளியாகி வருகின்றன. அப்போது 48 மில்லியன் டாலருக்கு உருவாக்கப்பட்டது.
தற்போது, 400- 480 மில்லியன் டாலருக்கு கடைசி சீசன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் நவ.26ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான இந்தத் தொடர் பாக்ஸ் ஆபிஸில் அவெஞ்சர் என்ட் கேமையும் விஞ்சுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரில் பல நாயகர்கள், நாயகிகள் இருப்பதால் அவர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பல புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடரில் விஎஃப் எக்ஸ் காட்சிகளும் தரமாக உருவாக்கப்பட்டுள்ளன.
கடைசி சீசன் மூன்று பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.
இரண்டாவது பாகம் டிச.25ஆம் தேதியும் கடைசி பாகம் டிச.31ஆம் தேதியும் வெளியாக இருக்கின்றன.
ஸ்டிரேஞ்சர் திங்ஸ் 4-ஆவது சீசனில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தீம் இசை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.