பிக் பாஸ் 
செய்திகள்

அம்பேத்கர் பெயரை ஒலிபரப்பாத பிக் பாஸ்! வலுக்கும் கண்டனம்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் அம்பேத்கர் பெயரை ஒலிபரப்பாததற்கு வலுக்கும் கண்டனங்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் அம்பேத்கர் பெயரை ஒலிபரப்பாமல், மியூட் செய்ததற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பள்ளிக் கூட டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், போட்டியாளர்கள் மாணவர்களாக வேடமேற்றுள்ளபோது, அம்பேத்கர் கூறிய பொன்மொழியைக் கூறி அவரின் பெயரைக் குறிப்பிடுவதில் தவறில்லை என்றும், இதில் வேறு எந்தவொரு நோக்கமும் இல்லை எனவும் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

நல்ல விஷயங்களை யார் கூறியிருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு உள் நோக்கமுமின்றி செய்யப்படும் செயல்களை அரசியல் நோக்கத்தோடு, ஒலிபரப்பாமல் மியூட் செய்வது கண்டனத்துக்குரியது எனவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 56 வது நாளை எட்டியுள்ளது. இந்த வாரம் முழுக்க உண்டு உறைவிடப் பள்ளியாக பிக் பாஸ் வீடு மாறியுள்ளது.

இதில் போட்டியாளர்கள் பலரும் மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் வேடமேற்று போட்டியை விளையாடினர். பார்வதி, கனி திரு, அமித் பர்கவ் ஆகியோர் ஆசிரியர்களாகவும் ப்ரஜின் தலைமை ஆசிரியராகவும் வேடமேற்றிருந்தனர். இசைக் கலைஞர் எஃப்.ஜே., பள்ளிப் பணியாளராகவும் நடித்திருந்தார். கானா பாலா உள்பட எஞ்சிய போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்களாக சிறப்பாக தங்கள் பங்களிப்பை கொடுத்திருந்தனர்.

பிக் பாஸ் டாஸ்க்கின்படி, பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் அனைவரிடமும் ஆசிரியர் பேசிக்கொண்டு வரும்போது, கானா வினோத் பேசும்போது, நீ கற்ற கல்வி உன் சமுதாயத்திற்கு பயன்படவில்லை எனில், நீ கற்றதில் பயன் இல்லை என்று பாபாசாகேப் அம்பேத்கர் கூறியிருக்கிறார் என்று பேசி தனது உரையை முடித்தார்.

கானா வினோத்

இதில், பொன்மொழி முழுவதுமாக ஒலிபரப்பான நிலையில், பாபாசாகேப் அம்பேத்கர் என்ற பெயர் மட்டும் ஒலிபரப்பப்படவில்லை. அப்பகுதியில் இரு விநாடிகளுக்கு மியூட் செய்யப்பட்டிருந்தது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டில் பெயர் எழுத, படிக்க கற்றுக்கொண்ட ரம்யா!

Baba Saheb Ambedkar name muted in bigg boss 9 tamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் குவியும் பக்தர்கள்!

தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது விழுந்த கிரேன்! 22 பேர் பலி

ரூ. 50-ல் சென்னையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமா? சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

பூக்களின் விலை உயர்வால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை: வியாபாரிகள் தகவல்

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15,000 ஆக உயர்வு! - அன்பில் மகேஸ் அறிவிப்பு

SCROLL FOR NEXT