அஹான் பாண்டே, அனீத் பட்டா.  படங்கள்: எக்ஸ் / ஐஐஎஃப்ஏ
செய்திகள்

காதலிக்கிறார்களா சையாரா பட நட்சத்திரங்கள்? இந்தியாவின் ஜென் ஸி விருது!

சையாரா படத்தின் நாயகன் - நாயகி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சமீபத்தில் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த சையாரா படத்தின் நாயகனும் நாயகியும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவின.

அறிமுக நாயகன் அஹான் பாண்டேவும் நாயகியாக அனீத் பட்டாவும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படம் திரையரங்கில் 600 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

கொரியன் திரைப்படமான எ மொமண்ட் டூ ரிமம்பர் என்ற படத்தை தழுவி சையரா உருவாக்கப்பட்டது.

இருவரும் காதலிப்பதாகக் கூறப்படும் நிலையில், விமான நிலையம் ஒன்றில் இருவரும் ஜாலியாக சிரித்துக் கொண்டே வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

தயாரிப்பாளர் கரண் ஜோகரும் இவர்களது காதலைக் குறித்து பேசியிருந்தார்.

கெமிஸ்டிரி என்பது ரொமான்ஸ் அல்ல; நாங்கள் நல்ல நண்பர்கள் என சமீபத்தில் அஹான் பாண்டே கூறியிருந்தார்.

இருப்பினும் இவர்கள் மிகச்சிறந்த காதலர்களாக இருப்பார்களென ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

தற்போது இருவருக்கும் ஜென் ஸி (Gen Z) ஐகான் விருது வழங்கப்பட்டுள்ளது.

சையாரா படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

Ahaan Panday and Aneet Padda sparked fresh speculation after being spotted at Mumbai airport just minutes apart on Friday. Their appearance, following a dinner outing the previous night, quickly reignited chatter on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை சரகத்தில் 31 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பண்ணைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மகளுக்கு பொங்கல் சீா் கொண்டு சென்றவா் விபத்தில் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியில் பிக்அப் லாரியில் தீ

14.1.1976: பீகாரில் குளிருக்கு 108 பேர் பலி

SCROLL FOR NEXT