2 ஆண்டுகள் காத்திருப்பு... ஆசை படத்தின் ரிலீஸ் தேதி!
நடிகர் கதிர் நடித்துள்ள ஆசை திரைப்படத்தின் வெளியீடு குறித்து...
நடிகர் கதிர், நடிகை திவ்ய பாரதி நடித்துள்ள ஆசை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியும் வெளியாகமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஷிவ் மோஹா இயக்கியுள்ள இந்தப் படம் மலையாள படத்தின் ரீமேக் என்பது கவனிக்கத்தக்கது.
Advertisement
Advertisement
அனுராஜ் மகோகர் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இஷ்க் எனும் திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ஷேன் நிகம், ஆன் ஷீத்தல், டாம் சாக்கோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
தமிழில் கதிர், திவ்ய பாரதி, லிங்கா, பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் வரும் மார்ச் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தப் படம் பல மாத காத்திருப்புக்குப் பிறகு வெளியாக இருக்கிறது.
The release date of the film 'Aasai', starring actor Kathir and actress Divya Bharathi, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.