நடிகர் பாலா நடிப்பில் வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம், தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. நகைச்சுவை நடிகரான இவர் சமூக வலைதளங்களில் மூலம் வறுமையிலுள்ளவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்தும் வருகிறார். இன்ஸ்டாகிராமில் பாலாவுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர்.
இவர் இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்கிற படத்தில் நடித்தார். இப்படம் கடந்த செப். 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும் இப்படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது.
இந்த நிலையில், காந்தி கண்ணாடி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிக்க: இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.