அஜித்குமார், உதயநிதி 
செய்திகள்

நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி!

நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அஜித் குமார் அணி ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3 ஆம் பிடித்ததையடுத்து, அவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H சீரியஸில் கன்ஸ்ட்ரக்டர் சாம்பியன்ஸ் (constructor champions) பிரிவில் கலந்துகொண்ட அஜித் குமார் அணியினர் 3 ஆம் இடம் பிடித்து அசத்தினர்.

இதற்கு துணை முதல்வர் உதயநிதி, நடிகர் அஜித் குமார் அணியினருக்கு வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.

இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம்.

'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!

சென்னை புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

50,000 தன்னார்வலர்கள் ஈடுபடும் உங்க கனவ சொல்லுங்க திட்டம்: நாளை தொடக்கம்!

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

போகிப் பண்டிகை: எவற்றையெல்லாம் எரிக்கக் கூடாது!

SCROLL FOR NEXT