முத்துக்குமரன் 
செய்திகள்

பிக் பாஸ் 9 தொடக்க நாளில்... முத்துக்குமரனின் புதிய முயற்சி!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முத்துக்குமரன் புதிய இணையத் தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முத்துக்குமரன் புதிய இணையத் தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளார். பிக் பாஸ் சீசன் 9 தொடக்க நாளையொட்டி இதனை அவர் அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார். ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்ற முத்துக்குமரன், அடுத்தடுத்து பல புதிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் நட்சத்திரத் தொகுப்பாளராக உயர்ந்தார்.

தொடர்ந்து திரைத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற முயற்சியுடன் இருந்த அவருக்கு, தற்போது பிளாக்‌ஷீப் நிறுவனத்தின் மூலம் இணையத் தொடரில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கான பூஜை அக். 5ஆம் தேதி நடைபெற்றது. பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியும் நேற்று தொடங்கியதால், இதனையொட்டி தனது புதிய பயண அறிவிப்பையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் குறிப்பிட்டுள்ளதாவது,

''அக். 5. கடந்த ஆண்டு இதே நாள் பெரும் வெளிச்சத்துக்கு மத்தியில் பிக் பாஸ் மேடையில் நின்றது நினைவில் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து என்னை வெளியேற்றிவிடுவார்களோ என்ற பயத்தில் இருந்து என்னை தேற்றி ஆதரவு கொடுத்த அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி செலுத்திக்கொள்கிறேன்.

பிக் பாஸ் முடிந்து ஓராண்டு ஆகியும் இன்னும் என்னைப் பொது இடங்களில் பார்ப்பவர்கள் என் மீது அன்பு செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் இந்த் அன்பு என்றுமே எனக்கு வேண்டும் என்ற பேராசை எப்போதும் எனக்கு உண்டு.

பிக் பாஸ் போட்டிக்கு இவன் தகுதியானவர் என்று நம்பி என்னை அனுப்பிய பிரதீப் மில்ராய், பாலச்சந்திரன், ஜெகன், அருண் - அரவிந்த் என எல்லோருக்கும் நன்றி.

இன்று என் மீது வைத்துள்ள அன்பின் முழு உருவமான் பிளாக்‌ஷீப்பில் எனக்கு பெரிய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் விக்னேஷ்காந்த் அண்ணனுக்கு நன்றி. உங்களை மகிழ்விக்க என்னால் முடிந்த உழைப்பைக் கொடுப்பேன். உங்கள் அன்பு என்றுமே எனக்கு கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற பேராசையுடன் நான் முத்துக்குமரன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டிற்குப் பொருந்தாதவர்கள்! குவியும் விமர்சனங்கள்!

Bigg boss 8 Muthukumaran act as hero in blaksheep web series

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவே... தர்ஷனா பனிக்!

அலையே... ஆஷு ரெட்டி!

என் மன வானில்... சான்வே மேகானா!

இன்னும் 100 நாள்களில் வெளியாகும் பராசக்தி - புது போஸ்டர் வெளியீடு!

கரூர் பலி: காவல்துறைக்கு நன்றி சொல்ல வேண்டும்! - கமல்ஹாசன்

SCROLL FOR NEXT