பைசன் திரைப்படம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் பேசியுள்ளார்.
நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக் - 17 அன்று வெளியாகவுள்ள திரைப்படம் பைசன்.
தென்மாவட்ட இளைஞர்களின் வாழ்வியலையும் கபடியையும் மையமாக வைத்து படத்தின் கதை உருவாகியுள்ளது. துருவ்வுடன் பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்திற்கான நிகழ்வில் பேசிய துருவ் விக்ரம், “நான் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், பைசன் தான் என் முதல் படம். இப்படத்திற்கான 100 சதவீத உழைப்பைக் கொடுத்திருக்கிறேன்.
நிச்சயம் திரைப்படத்தை ரசிப்பீர்கள். அனைத்து குழுவினரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். முக்கியமாக, இயக்குநர் மாரி செல்வராஜ் இறங்கி ஒரு சம்பவம் பண்ணியிருக்கிறார்.” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பிக் பாஸ் 9: 20 போட்டியாளர்கள் - முழு விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.