நடிகர் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், க்ருத்தி ஷெட்டி நடிப்பில் உருவான எல்ஐகே திரைப்படம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருந்தது.
ஆனால், அதே நாளில் டூட் திரைப்படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு படங்களையும் வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்ததால் தீபாவளி வெளியீட்டில் எந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், டூட் திரைப்படம் வெளியீட்டிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன் டிச. 18 ஆம் தேதி வெளியாகும் என்பதை தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், எல்ஐகே இந்தாண்டே வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், டிராகன், டூட், எல்ஐகே என ஓரே ஆண்டில் பிரதீப் ரங்கநாதன் மூன்று திரைப்படங்களுடன் வந்துள்ளதும் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிக்க: ரஜினி - கமல் திரைப்படத்திற்குத் தயாராகும் லோகேஷ் கனகராஜ்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.