நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகும் ஜீனி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு, ப்ரோ கோட், ஜீனி ஆகிய திரைப்படங்கள் வரிசையாக உருவாகி வருகின்றன. இதில், கராத்தே பாபு முதலில் வெளியாகவுள்ளது.
பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் ஜீனி திரைப்படத்திற்கான விஎஃப்எக்ஸ் பணிகள் முடிய காலம் எடுக்கும் என்பதால் அடுத்தாண்டு இப்படம் திரைக்கு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான அப்தி அப்தி பாடலை வெளியிட்டுள்ளனர். இதில், நடிகர்கள் ரவி மோகன், கல்யாணி பிரியதர்ஷன், கிருத்தி ஷெட்டியின் நடனம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்பாடலை மஷூக் ரஹ்மான் எழுத, மைசோ கரா மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.