சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடரில் நடித்து வந்த பிரவீன், இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்.
இந்தத் தொடரில் திரவியம், ஆர்த்தி சுபாஷ், பவித்ரா நாயக் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்து வருகின்றனர்.
மேலும், இந்தத் தொடரில் இசக்கி பாத்திரத்தில் நடிகர் பிரவீன் நடித்து வந்தார். இவர் ராஜா ராணி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர். நடிகர், பாடகர் என பல்வேறு திறமைகளைக் கொண்டவர்.
இவர், அண்மையில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதால், பிரவீன் நடித்து வந்த பாத்திரத்துக்கு, மற்றொரு நடிகர் மாற்றப்பட்டுள்ளார்.
இனி வரும் நாள்களில், சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடரில் இசக்கி பாத்திரத்தில் ஆரோன் சஞ்சய் நடிக்கவுள்ளதாகத் தொடர் குழு தெரிவித்துள்ளது.
மாடலிங் துறையில் பிரபலமான ஆரோன் சஞ்சய், சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடரில் நடிக்கவுள்ளதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிக்க: 6 நாள்களில் காந்தாரா சாப்டர் - 1 இவ்வளவு வசூலா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.