ராஜு பாய் வருகிறார்... எடிட் செய்யப்பட்டு மறுவெளியீடாகும் அஞ்சான்!
நடிகர் சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்தின் மறுவெளியீடு பற்றி...
நடிகர் சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் மீண்டும் எடிட் செய்யப்பட்டு மறுவெளியீடு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வெளியீட்டுத் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியானது அஞ்சான் திரைப்படம். ஒந்தப் படத்தில் சூர்யா, வித்யூத் ஜமால், சமந்தா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் படம் சமூக வலைதளங்களின் விமர்சனங்களால் மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்தது.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் வைரலானாலும் படத்தில் வரும் ராஜு பாய் கதாபாத்திரம் இன்றளவும் மீம்ஸ்களாக வலம்வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை மறு எடிட் செய்து கூடுதல் சுவாரசியமாக உருவாக்கி உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா, ரெட்டோ கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இருப்பினும் ரெட்ரோ வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
தற்போது, சூர்யா கறுப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா 46 படத்திலும் நடித்து வருகிறார்.
It has been announced that actor Suriya's film Anjaan will be re-edited and re-released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.