தனுஷ், மாரி செல்வராஜ்.  படம்: எக்ஸ் / மாரி செல்வராஜ்.
செய்திகள்

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படம் நடிகர் தனுஷ் உடன் என உறுதியளித்துள்ளார்.

இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் திரைப்படம் அக்.17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

நிவாஸ் கே. பிரசன்னா இசையில் உருவாகியுள்ள அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மாரி செல்வராஜ் பேசியதாவது:

பைசன் படத்துக்குப் பிறகு தனுஷ் சார் படம்தான். ஐசரி கணேஷ் மற்றும் வுண்டர்பார் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். வரலாற்று சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும்.

பைசன் முன்னமே பா. ரஞ்சித்துடன் சொல்லியதால் தற்போது முடித்தேன். தாணு சார், ஐசரி கணேஷ் உடன் படம் இருக்கிறது. ஆனால், முதலில் தனுஷ் படம்தான் நான் ஒப்புக்கொண்டேன் என்பதால் அடுத்து அந்தப் படம்தான் என்றார்.

Director Mari Selvaraj has confirmed that his next film will be with actor Dhanush.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைத்தேன் சொல்கிறேன் செய்கிறேன்... சமந்தா!

அறிமுகம் தேவையில்லை... சாக்‌ஷி அகர்வால்!

வெய்யிலைத் தேடிச் சென்றால் மழை... ஆம்னா ஷரீப்!

மூன்று ரோஜாக்கள்... தீப்ஷிகா!

பச்சைக் குயில்... கரிஷ்மா டன்னா!

SCROLL FOR NEXT