குட் பேட் அக்லி திரைப்படத்தின் வணிகம் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார்.
மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களிடம் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.
தற்போது, பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தையும் மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் அக். 17 அன்று வெளியாகிறது.
இந்த நிலையில், டியூட் நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் ரவி ஷங்கர், “நாங்கள் தயாரித்த முதல் தமிழ்ப்படமான குட் பேட் அக்லி நடிகர் அஜித் குமாருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. மேலும், அப்படம் தமிழகத் திரையரங்குகளில் பெரிய வணிகத்தைச் செய்தது. அதேபோல், பிரதீப் ரங்கநாதனுக்கும் நிகழ வேண்டும் என விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மாரி செல்வராஜுக்காக 20 ஆண்டுகள்கூட காத்திருப்பேன்: துருவ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.