மாதம்பட்டி ரங்கராஜ் / ஜாய் கிரிசில்டா படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண மாட்டேன்: மாதம்பட்டி ரங்கராஜ்

ஜாய் கிரிசில்டா தொடர்ந்த வழக்கு மற்றும் பேட்டி தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கை...

இணையதளச் செய்திப் பிரிவு

திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா தொடர்ந்துள்ள வழக்கில், அவர் எதிர்பார்ப்பது போன்று நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ளமாட்டேன் என சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

''நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர்.

நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.

இந்தப் பிரச்னை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை.

ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல்நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்.

எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 9: சுபிக்‌ஷாவுக்கு தவெகவினரின் ஆதரவு அதிகரிப்பது ஏன்?

I will not seek a solution outside the court: Madhampatti Rangaraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாவட்டத்தில் நடப்பாண்டில் இணையவழி குற்ற வழக்குகளில் ரூ.2.38 கோடி மீட்பு

உதகை ரயில் நிலையத்தில் 117-வது மலை ரயில் தினம் கொண்டாட்டம்

இருசக்கர வாகனத்திலிருந்து தடுமாறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள்

6 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் : இளைஞா் கைது

SCROLL FOR NEXT