FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சக்தித் திருமகன் ஓடிடி தேதி!

சக்தித் திருமகன் படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு...

Updated On : 15 அக்டோபர் 2025, 2:55 pm IST
நடிகர் விஜய் ஆண்டனி
பகிர்:

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவான சக்தித் திருமகன் படத்தை, விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்கியிருந்தார். இப்படம் செப். 19 திரைக்கு வந்தது.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளைக் கேள்விகேட்கும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்தார். கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்ததால் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

Advertisement

Advertisement

வணிக ரீதியாகவும் ரூ. 10 கோடி வரை வசூலித்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில், இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற அக். 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

vijay antony's sakthi thirumagan ott date announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments