இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விஷ்ணு எடவன். விக்ரம், லியோ திரைப்படங்களில் பாடல்களும் எழுதினார்.
தற்போது, அறிமுக இயக்குநராக நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள “ஹாய்” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் படத்தை விஷ்ணு இயக்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இப்படத்திற்கு முன் விக்ரம், அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்திலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: மருத்துவமனையில் காஜல்... என்ன ஆனது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.