இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி கடந்த அக். 5 ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய்சேதுபதியே, இம்முறையும் தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் வீடு இம்முறை சூப்பர் டீலக்ஸ் வீடு, பிக் பாஸ் வீடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ் வீடு சொகுசு வசதிகளுடனும், பிக் பாஸ் வீடு அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தமுறை போட்டியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, நடிகை கெமி, ஆதிரை, ஆடல் - பாடல் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கமுருதீன், கலையரசன் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றனர்.
இதனிடையே, யோகா ஆசிரியரான நந்தினி, கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருப்பவர்களுடன் சண்டையிட்டு, தாமாக முன்வந்து வெளியேறினார். மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வாரம் எலிமினேஷனில் அரோரா, கமுருதீன், அப்சரா உள்ளிட்டோர் இருந்தனர். மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் அப்சரா வெளியேறியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்று இரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிய வரும். 3 பேர் வெளியேறியுள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதையும் படிக்க: ஆர்யன் டிரைலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.