மனத்தி கணேசன், ஓய்வுபெற்ற ஆசிரியர் தங்கராஜ், மாரி செல்வராஜ் 
செய்திகள்

பைசன் - நிஜ ஆசிரியருக்கு மரியாதை செலுத்திய மாரி செல்வராஜ்!

மனத்தி கணேசனின் ஆசிரியரைச் சந்தித்த மாரி செல்வராஜ்...

இணையதளச் செய்திப் பிரிவு

கபடி வீரர் மனத்தி கணேசனுக்கு வழிகாட்டியாக இருந்த அவரது ஆசிரியரை இயக்குநர் மாரி செல்வராஜ் கௌரவப்படுத்தியுள்ளார்.

நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

மேலும், இப்படம் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைசன் கதையில் அர்ஜூனா விருது வென்ற கபடி வீரர் மனத்தி பி. கணேசனின் வாழ்க்கையும் இருப்பதால் அவருக்கு வழிகாட்டியாக இருந்த உடற்பயிற்சி ஆசிரியரை ஒரு கதாபாத்திரமாக திரைப்படத்தில் மாரி செல்வராஜ் காட்டியிருந்தார்.

சந்தனராஜ் என்கிற அக்கதாபாத்திரத்தில் நடிகர் அருவி மதன் நன்றாகவும் நடித்து கவனம் ஈர்த்தார்.

இந்த நிலையில், நிஜ ஆசிரியரான தங்கராஜை இயக்குநர் மாரி செல்வராஜ், மனத்தி கணேசனுடன் நேரில் சென்று மாலை அணிவித்து தன் மரியாதையைச் செலுத்தியுள்ளார். இவர்கள் சந்தித்துக்கொண்ட விடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

director mari selvaraj met manathi p. ganeshan's teacher

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மடாலயங்களில் படப்பிடிப்பு

எல்டிஐமைண்ட்ட்ரீ 3வது காலாண்டு நிகர லாபம் 10.5% சரிவு!

நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு இந்தியா: இஸ்ரோ தலைவர் பெருமிதம்

அமெரிக்காவில் பனிப்புயலால் கடும் பாதிப்பு: ஒரேநாளில் 10,000 விமானங்கள் ரத்து!

கலைத்துறையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜா ஸ்தபதி!

SCROLL FOR NEXT